Monday, August 22, 2011

KAINGNAR KASI AANANTHAN

உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி.  இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன்,  பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.

அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…

இருப்பாய் தமிழா நெருப்பாய்  நீ….
இழிவாய் கிடக்க செருப்பா நீ….
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…
துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….

Saturday, August 20, 2011

pa vijay kavithai

திங்கள், டிசம்பர் 04, 2006

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

 


இப்போதெல்லாம் தமிழகம் எங்கும் எரியத்தொடங்கியிருக்கும் உணர்வுக்கொந்தளிப்புக்கு ஒரு சாட்சி இந்தக் கவிதை தமிழன் கோவம் கொண்டிருக்கிறான்.'ஈழத்தமிழரை ஆதரிப்பது தவறெண்டால் அந்த தவறைத் தொடர்ந்து செய்வோம்' என்ற கலைஞரின் கோவத்தைப் போல உணர்வுள்ள தாய் தமிழ் மண்ணின் எல்லா மனிதரும் வீறுகொண்டு எழுந்தால் ஈழத்தமிழருக்கு விடிவு சாத்தியமே.



புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!
- வித்தகக் கவிஞர் ப. விஜய்


இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்கும்!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!

ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற

அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்

நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன், தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

plz read me

கவிதை எழுதியவர் :::: மீரா
நன்றி: Thamilworld.com
உச்சிமுதல் பாதம் வரை
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
கன்னதில் முத்தமிட்டாய்
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கட்டழகை சொல்லிவிட
கண்ணன் முகம் காணவில்லை
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்

Anna Hazare

தலையங்கம்
தலையங்கம்: சட்டமல்ல, கண்துடைப்பு!
First Published : 29 Jul 2011 01:48:04 AM IST

Last Updated : 29 Jul 2011 05:01:29 AM IST
கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வகையில் இது மனநிறைவு தந்தாலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பல கருத்துகள் ஏற்கப்படவில்லை என்பது நெருடலாகவே இருக்கிறது.
சமூக ஆர்வலர்கள் குழு தெரிவித்த கருத்துகள் ஏற்கப்படப்போவதில்லை என்றால் எதற்காக அவர்களை வரைவு மசோதா குழுவில் சேர்த்துக்கொண்டு பலமுறை பேச்சு நடத்த வேண்டும்? பேச்சுகளை விடியோவில் பதிவு செய்யவேண்டும்? இல்லாத நாடகமெல்லாம் நடிக்கப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு நமக்குக் கிடைக்கும் விடை- திருவிழாவில் விலைஅதிகமான பொருளைக் கேட்டு அழுகின்ற குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிடுவதைப் போல, மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றிவிட்டது மத்திய அரசு என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
அரசு தயாரித்த வரைவு மசோதா மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதே, அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் நடுவே வருத்தம் மேலிட்டது. அதே வருத்தம் இப்போதும் தொடர்கிறது. ""அடித்தட்டு மக்களுக்கு (ஆம் ஆத்மி) எதிரான ஊழல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் இந்த லோக்பால் கொண்டிருக்கும் என்று உண்மையாக நம்பிக்கொண்டிருந்தேன்'' என்று வேதனைப்பட்டுள்ளார் அண்ணா ஹசாரே.
இதற்காக அவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இந்த விவகாரத்தில் காட்டிய அபரிமிதமான ஆர்வமும் அவர்கள் நடத்திய போராட்டங்களும் இல்லையென்றால், லோக்பால் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும். இந்த அளவுக்காவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெருமை அண்ணா ஹசாரே குழுவையே சேரும்.
"பிரதமர் பதவியை இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்குத் தான் எதிராக இல்லை' என்று முன்னர் தெரிவித்ததைப்போலவே, பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவைக் கூட்டத்திலும் தெரிவித்ததாகவும், ஆனால், அதை அமைச்சரவை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது பிரதமர் மீது லோக்பால் நடவடிக்கை கூடாது என்பது ஏற்கப்படக்கூடியதே என்றாலும், இதே அளவுகோலை நீதிபதிகளுக்கும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் உறுப்பினர்கள் நடவடிக்கைக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதிலும் தவறு காண முடியாது.
நாம் ஒரு விஷயத்தை நன்றாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றால் அது அவர்களைத் தேர்ந்தெடுத்த நமது குற்றம்தானே? எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த ஓர் அமைப்பும் நாடாளுமன்றத்தைவிட உயர்ந்ததாக இருப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
இந்த மசோதா நிறைவேறிய பின்னர், லோக்ஆயுக்த வரம்புக்குள் மாநில முதல்வர் பதவி இடம்பெறாமல் போகும் நிலைமை எல்லா மாநிலங்களிலும் உருவாகும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி தெரிவித்துள்ளார். அவரது எச்சரிக்கையில் அர்த்தம் இருக்கிறது. குறிப்பாக, இப்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது கர்நாடக மாநில லோக்ஆயுக்த கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வர் பதவிக்கே உலைவைத்துள்ள நிலையில், வேறு எந்த மாநில முதல்வரும் இந்தச் சட்ட வரம்புக்குள் இடம்பெறுவதை விரும்ப மாட்டார். பிரதமருக்கு அளிக்கப்படும் விதிவிலக்கு முதல்வர்களுக்குத் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நமது கருத்து.
லோக்பால் சட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்கின்ற விதிமுறை இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யப் போதுமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழலை விஞ்சும் ஊழல்கள் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க அதிகபட்சம் 7 ஆண்டுகள் காலஅவகாசம் அளிப்பதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்துச் சாட்சிகளையும் கலைத்துவிடுவார் என்பது மட்டுமல்ல, அனைத்துச் சாட்சிகளும் மாயமாய் மறைந்துபோய் விசாரணையே நீர்த்துப்போகக் கூடும்.
மேலும், இந்த லோக்பால் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், விசாரணை வரம்பு 7 ஆண்டுகள். இந்த அளவுக்கு நீண்ட காலஅவகாசம் முறைகேடுகளில் போய் முடியும். நேர்மையுடன், அநீதிக்கு வளையாமல் நிற்கும் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு சாதகமான சூழலில் சாதகமான தீர்ப்பைப்பெற குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது இந்த விதிமுறை.
மேலும் இந்த அமைப்பு தனக்குள் பாதி உறுப்பினர்களை நீதிபதிகளாகக் கொண்டிருந்தபோதிலும்கூட, இதற்கு வழக்குப் பதிவு செய்யும் (பிராசிக்யூட்) அதிகாரம் இல்லை. விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். "தெய்வம் நின்று கொல்லும்' என்பதற்காக, சட்டமும் நிதானமாகத்தான் தண்டிக்கும் என்றால், மக்கள் அச்சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை கொள்வார்கள்?
கர்நாடக லோக்ஆயுக்த தலைவரும் லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம்பெற்றவருமான சந்தோஷ் ஹெக்டே தன் கருத்தைத் தெரிவிக்கையில், ""44 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வருகிறார்கள். ஆனால், வலுவாகக் கொண்டுவரவில்லை'' என்று கூறியுள்ளது இதைக் கருத்தில்கொண்டுதானோ என்னவோ?
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினோம். இப்போது லோக்பால் கொண்டுவந்துள்ளோம்' என்று காங்கிரஸ் தலைவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசும் அதிகாரிகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மெல்லமெல்ல வலுவிழக்கச் செய்துவிட்டார்கள். இப்போது அதிகாரிகள் இதைக் கண்டு அஞ்சுவதே இல்லை. கேட்ட தகவலைக் கொடுப்பதும் இல்லை.
இதே நிலையை லோக்பால் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் லோக்பால் மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு அது சக்திவாய்ந்த அமைப்பாகச் செயல்பட வழிகோல வேண்டும். அதைவிட்டு விட்டு அவசரக்கோலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதைவிடப் பேசாமலேகூட இருந்துவிடலாம்!

2008 direct sub inspector news

சட்டம் - ஒழுங்கு காவல் பணிக்கு மாற முடியாமல் தவிக்கும் எஸ்.ஐ.க்கள்
First Published : 20 Aug 2011 04:33:21 AM IST

கரூர்: தகுதியிருந்தும் சட்டம் - ஒழுங்கு (தாலுகா) காவல் பணிக்குச் செல்ல முடியாமல், தமிழகத்தில் 592 காவல் உதவி ஆய்வாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகக் காவல் துறையில் 2004-06 ஆம் ஆண்டு வரையிலான காலி பணியிடங்களைக் கருத்தில் கொண்டு, 2006-ல் 754 ஆண், பெண் உதவி ஆய்வாளர்களுக்கான நேரடித் தேர்வு நடைபெற்றது. இதில், 20 சதவீதம் துறை ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு 2008-ல் பணி நியமன ஆணை வழங்கியபோது, மதிப்பெண்கள் அடிப்படையில் சட்டம் - ஒழுங்கு பணிக்கு 162 பேர், ஆயுதப் படைக்கு 400 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 192 பேர் என 3 பிரிவு நிலைகளாக ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு காவல் உயர் பயிற்சியகத்தில் ஒரே விதமான பாடத் திட்டத்தைக் கொண்டு, சட்டம் மற்றும் திறந்தவெளி பயிற்சியளிக்கப்பட்டது.
தாலுகா உதவி ஆய்வாளர்கள், காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு, குற்றம், தனிப் பிரிவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
இதர பணி நிலைகளில் உள்ளோர் குறிப்பிட்ட பகுதிகளுக்கான காவல், முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு, கலவர நேரங்களிலான பணி, போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆனாலும், இவர்களின் நோக்கம் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி, தங்களின் திறமையை நிலைநாட்டுவதே. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காதோ என்ற அச்சத்தில் 592 உதவி ஆய்வாளர்களும் உள்ளனர்.
இதற்குக் காரணம் 5.11.1997-ம் தேதியிட்ட அரசாணை எண். 1598-ல் கூறப்படும் விதிகளாகும். அதில், ஆயுதப் படை, சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள், தாலுகா உதவி ஆய்வாளராக மாறுதலில் செல்ல, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தற்போதைய பணியிடத்திலேயே பணி செய்திருக்க வேண்டும். 40 வயதுக்குள்ளிருக்க வேண்டும். எவ்விதத் தண்டனையுமின்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 20 சதவீதத் துறை ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்படும் உதவி ஆய்வாளர்களுக்கு வயது உச்ச வரம்பு, பணியில் சேரும்போது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அரசாணையில் கூறப்படும் விதிகள், துறை ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற 40 வயதைக் கடந்தோர், காவல் துறையில் 10 முதல் 20 ஆண்டுகள் வரையில் பணியாற்றிய அனுபவம் உள்ளோர் தாலுகா பணிக்குச் செல்லும் வாய்ப்பைத் தடுக்கும் விதத்தில் உள்ளன.
இந்நிலையில், இந்த அரசாணையானது 2003-ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது தளர்த்தப்பட்டு, காவல் துறையில் பணியாற்றுவோருக்கு பணி அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, 40 வயது என்ற வரம்பு, உதவி ஆய்வாளராக 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற விதிகளைத் தளர்த்தி, 4.4.2003 ஆம் தேதியிட்ட அரசாணை எண். 312 வெளியிடப்பட்டது. இதன்படி, நேரடி உதவி ஆய்வாளர்கள் தாலுகா பிரிவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.
மேலும், நடைமுறையிலுள்ள அரசாணைப்படி, உதவி ஆய்வாளரைத் தேர்ந்தெடுக்கும்போது, தாலுகா உதவி ஆய்வாளர் காலியிடங்களில் 10 சதவீத இடங்களை ஆயுதப் படை மற்றும் சிறப்புக் காவல் படை உதவி ஆய்வாளர்களுக்கு அளிக்கவும் வகை செய்யப்பட்டது.
ஆனால், 2010-ல் நடந்த உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இந்த 10 சதவீத நடைமுறையானது பின்பற்றப்படவில்லை.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் 2,933 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. மேலும், தலைமைக் காவலர்களாக இருந்தவர்கள் பணி மூப்பு அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், தகுதியிருந்தும் திறமையை வெளிக்காட்ட முடியாத துறைகளில் 592 உதவி ஆய்வாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையை மாற்ற, நேரடி உதவி ஆய்வாளராகப் பயிற்சி முடித்து, ஆயுதப் படை, சிறப்புக் காவல் படையில் பணியாற்றும் 592 உதவி ஆய்வாளர்களை வயது மற்றும் 5 ஆண்டு உதவி ஆய்வாளர் பணி அனுபவம் ஆகிய விதிகளைத் தளர்த்தி, தாலுகா பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்தப் பணியிட மாற்றத்தால் அரசுக்கு நிதிச் சுமை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் எனக் கோருவதோடு, பணி அனுபவத்தால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் தங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்கின்றனர் இவர்கள்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this
  to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Friday, August 19, 2011

WHY NEED JAN LOKBAL


ஏன் வேண்டும் லோக்பால் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011 23:49
இதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு இதை நிறைவேற்ற வேண்டும்.

யார் இந்த நீதிபதி ?  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் சவுமித்ரா சென்.  இவர்தான் இன்று ராஜ்யசபையில் ஆஜராகி வாதாடியவர்.  என்ன குற்றச் சாட்டுகள் இவர் மீது ?
 justice_soumitra_sen_306x180_634491652260088811
1983ம் ஆண்டு, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும் இடையே ஒரு வழக்கு.  இந்த வழக்கில், ஆர்.என்.பைன் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 1984ம் ஆண்டு, ஏப்ரல் 30 அன்று, அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த சவுமித்ரா சென்னை ரிசீவராக நியமிக்கிறார்.  சென்னின் பணி, இரும்பு உருக்கு ஆலையில் இருந்த தள்ளுபடி செய்யப் பட்ட பொருட்களை, விற்பனை செய்து, அவற்றுக்குண்டான தொகையை வசூல் செய்து கணக்கு வைக்க வேண்டும்.   அவ்வாறு பெறப்படும் தொகைக்கான கணக்கை ஒவ்வொரு 6 மாதத்துக்கும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.  அந்த ஆணையில் விற்பனையாகும் மொத்த தொகையில் 5 சதவிகிதத்தை சவுமித்ரா சென் தனக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், மீதம் உள்ள தொகையை தனியாக ஒரு வங்கிக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த தனி வங்கிக் கணக்கில் இவருக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப் படுகிறது. 1 ஜனவரி 1993 முதல், 1 ஜுன் 1995 வரை சவுமித்ரா சென் 33,82,800 ரூபாய் வசூல் செய்கிறார்.   6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.

இவ்வாறு வசூல் செய்த பணத்தை சவுமித்ரா சென் ஏஎன்இஸட் க்ரின்ட்லேஸ் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு அக்கவுன்டிலும், அலஹாபாத் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு வங்கியிலும் போட்டுக் கொள்கிறார்.

இந்நிலையில் 2003ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார் சவுமித்ரா சென். உயர்நீதிமன்ற நீதிபதியான பின்னும், 1994ல் தான் நியமிக்கப் பட்ட ரிசீவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், 1983ல் தொடரப்பட்ட வழக்கு என்னதான் ஆயிற்று என்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மீண்டும் அந்த வழக்கை உயிர்ப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எடுத்து வருகிறது.

அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து விசாரித்தால், சவுமித்ரா சென் 33 லட்ச ரூபாயையும், வரவு வைக்கவில்லை என்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டிய கணக்குகளையும் சமர்ப்பிக்க வில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொடர்ந்த வழக்கில், நீதிபதியாக அமர்ந்திருந்த சவுமித்ரா சென்னுக்கு நேரடியாக, மொத்த விற்பனை தொகை எவ்வளவு, அதை எந்த வங்கியில் முதலீடு செய்திருக்கிறார் ஆகிய விபரங்களை சமர்ப்பிக்கச் சொல்லி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுகிறார்.  ஆனால், அந்த உத்தரவை வாங்கி காற்றில் பறக்க விட்டு விட்டு விடுகிறார் சென்.

இந்த உத்தரவை அமல்படுதத் முடியாத வண்ணம் ஏப்ரல் 2006 வரை இழுத்தடிக்கிறார் சென்.

எரிச்சலடைந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 17.05.2006 அன்று, அன்றைய தேதி வரை வட்டியோடு சேர்த்து 52 லட்ச ரூபாயை சவுமித்ரா சென் கட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறார். உத்தரவிட்டதோடு அல்லாமல், ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு, இப்படி வரைமுறை இல்லாமல் நடந்து கொண்ட சவுமித்ரா சென்னின் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறார். இதையடுத்து சவுமித்ரா சென், 40 லட்ச ரூபாயை கட்டுகிறார்.  கட்டி விட்டு, தன் தாயார் மூலமாக, மீதம் உள்ள 12 லட்ச ரூபாயை கட்ட கால அவகாசம் கேட்கிறார்.

இதன் நடுவே, சவுமித்ரா சென்னின் மீதான புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் செல்கிறது.  அவர் ‘சென்’னை அழைத்து, இந்தப் புகார்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சென் இந்தப் புகார்களுக்கு பதிலளிக்க எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்கிறார்.  கேட்டு விட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே தன் தாயார் மூலமாக டிவிஷன் பென்ச் முன்பாக,  தன் மீது கூறப்பட்ட கண்டனங்களை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்கிறார். இவ்வாறு மேல் முறையீடு செய்கையில், சம்பந்தப் பட்ட ஷிப்பிங் கார்பரேஷன் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து, இதை நீக்குவதற்கு உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்டு, அவ்வாறு இல்லை என்று அவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த கண்டனங்கள் நீக்கப் படுகின்றன.
 5591847054_e61f83a11b_b
இதை எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்று, பாருங்கள் என் மீதான கண்டனங்கள் நீக்கப் பட்டு விட்டன என்று கூறுகிறார்.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பட்நாயக், ஆர்.எஸ்.லோதா மற்றும் ஏ.பி.ஷா ஆகியோர் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, சவுமித்ரா சென் மீதான புகார்களை விசாரிக்கச் சொல்லுகிறார்.

அவர்கள் அந்தப் புகார்களை விசாரித்து உண்மை என்ற அறிக்கை அளிக்கின்றனர்.  அவர்கள் முன்பாக ஆஜரான சவுமித்ரா சென், இந்தப் புகார்களுக்கான உங்கள் பதில் என்ன என்று கேட்டால், நான்தான் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேனே… இதில் என்ன தவறு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார்.

இதன் நடுவே, கொல்கத்தா பேன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சவுமித்ரா சென் ரிசீவராக நியமிக்கப் பட்ட பொழுது மேலும் ஒரு 70 லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்ட விபரமும் தெரிய வந்தது.     அப்போதைய தலைமை நீதிபதி, இவரை ராஜினாமா செய்யச் சொன்ன போது மறுத்த காரணத்தால், ராஜ்ய சபையில் 58 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு, இவர் மீதான பதவி நீக்க தீர்மானம் எழுப்பப் பட்டது.  அதன் பின், நீதிபதிகள் மீதான விசாரணைச் சட்டத்தின் படி, ஒரு தலைமை நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுனர் அடங்கிய குழு சென் மீதான குற்றச் சாட்டுகளை மீண்டும் விசாரணை செய்தது.  மீண்டும் விசாரணை செய்த இந்தக் குழு, சவுமித்ரா சென் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன என்று முடிவுக்கு வந்தது.

இதையடுத்தே இன்று ராஜ்யசபை முன்பு ஆஜராகி, சவுமித்ரா சென், தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.    இதற்குப் பிறகு, ராஜ்யசபையில் வாக்கெடுப்பு நடந்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒன்றாகக் கூடி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, சவுமித்ரா சென் பதவி நீக்கம் செய்யப் படுவார்.  இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

இதுதான் இன்றைய நிலைமை.   அரசியல் அமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு அப்படி ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.   நீதிபதிகள் நேர்மையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

ஆனால், இன்றைய நிலைமை, அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்த காலத்தில் உள்ளது போலவா இருக்கிறது ?  இன்று நீதித்துறையில் உள்ள ஊழல்கள் அதிகமாகி விட்டன  என்பதை நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்களே….!!!

சவுமித்ரா சென் விஷயத்தில், வங்கி ஆவணம் மற்றும் மற்ற ஆதாரங்கள் தெளிவாக இருந்ததால் அவர் மீதான குற்றச் சாட்டுகளை இத்தனை கட்ட விசாரணையையும் தாண்டி எடுத்துச் செல்ல முடிந்தது.  அதற்காக இன்று நாட்டில் உள்ள அத்தனை உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்ல முடியுமா ?  எல்லா நீதிமன்றத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றனவே….!!!

இந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காண்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவில் நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ?

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் கடமை, ஒவ்வொரு சட்டத்துக்கும் உண்ணா விரதம் இருந்தால் பாராளுமன்றம் எதற்கு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் இன்று நீண்ட விளக்கத்தை பாராளுமன்றத்தில் அளித்தார்.   சட்டம் இயற்றும் கடமை உள்ள பாராளுமன்ற வாதிகளால் கடந்த 15 ஆண்டுகளாக மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே….    மற்ற சட்டங்கப் பற்றியும், மசோதாக்களைப் பற்றியும் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்துகிறார்களா ?

லோக்பால் மசோதாவைத் தவிர இந்த பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்த இத்தனை மசோதாக்கள் இருக்கின்றனவே….

The National Food Security Bill, 2011
The Narcotic Drugs and Psychotropic Substances (Amendment) Bill, 2011
The Prevention of Money Laundering (Amendment) Bill, 2011
The Benami Transactions (Prohibition) Bill, 2011
The Constitution (Scheduled Tribes) Order (Amendment) Bill, 2011
The Indecent Representation of Women (Prohibition) Amendment Bill, 2011
The Agriculture Bio-Security Bill, 2011
The Nuclear Regulatory Authority Bill, 2011
The Biotechnology Regulatory Authority of India Bill, 2011
The Regional Centre for Biotechnology Bill, 2011
The Electronic Service Delivery Bill, 2011
The Warehousing Corporation (Amendment) Bill, 2011
The Companies (Amendment) Bill, 2011
The Wildlife (Protection) Amendment Bill, 2011
The Indian Stamp (Amendment) Bill, 2011
The National Commission for Human Resources for Health Bill, 2011
The Customs Law (Amendment and Validation) Bill, 2011
The Boarder Security Force (Amendment) Bill, 2011
The National Academic Depository (Amendment) Bill, 2011
The National Council for Higher Education and Research Bill, 2011
The Universities for Innovation Bill, 2011
The Press and Registration of Books and Publications Bill, 2010
The Inter State Migrant Workmen [Regulation of Employment & Conditions of Service] (Amendment) Bill, 2011
The Administrator’s General (Amendment) Bill, 2011
The Mines and Minerals (Development and Regulation) Bill, 2011
The Emigration Management Bill, 2011
The Damodar Valley Corporation (Amendment) Bill, 2011
The Passengers Security Bill, 2011
The Rajiv Gandhi National Institute of Youth Development Bill, 2011
The National Sports Development Bill, 2011
The Land Acquisition, Rehabilitation and Resettlement Bill, 2011

இந்த மசோதாக்களை நாங்கள் சொல்வது போலத்தான் உருவாக்க வேண்டும், நாங்கள் சொல்வதுதான் சட்டமாக வேண்டும் என்று யார் அடம் பிடிக்கிறார்கள்.. ?

காங்கிரஸ் அரசின் விருப்பப் படி, ஒரு வலுவில்லாத லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து, அந்த மசோதா, ஏற்கனவே உள்ள துருப்பிடித்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைப் போல உருவாக்கி, ஸ்பெக்ட்ரம், காமல்வெல்த் விளையாட்டுக்கள் போல பல்வேறு ஊழல்களைப் புரிந்து அதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானம் 467 கோடி என்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்களே…
it_retun_abstract_2002-11_1
அது போல ஊழல் புரிய வேண்டும் என்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவை எதிர்கிறார்கள்…..
 4257793485_3a95486ff2_z

இதற்காகத் தானே வரவேண்டும் லோக்பால் ?
 

Tuesday, August 16, 2011

DINA MANI


அதிகார மமதை ! தினமணி தலையங்கம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 1
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011 08:03
எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.

ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால்,  உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?

லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது  தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை  மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.

பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.

சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.

எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள்,  அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை.

சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.  சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?
நன்றி தினமணி

ANNA HAZARE ARREST


நெருக்கடி நிலை ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 19:04
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த அன்னா ஹசாரே உள்ளிட்டவர்களை இன்று டெல்லி காவல்துறையினர் கைது செய்திருப்பது நிச்சயமாக 75ல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலையை நினைவு படுத்துகிறது.

அப்படி என்ன தவறு செய்து விட்டார் திஹார் சிறையில் அடைக்கப் படும் அளவுக்கு ? இந்த தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடித்த ராசா, சுரேஷ் கல்மாடி, கனிமொழி போன்ற ஊழல் பேர்விழிகள் அடைக்கப் பட்டுள்ள திஹார் சிறையிலேயே, ஊழலுக்கு எதிராக போராடிய நபரும் அடைக்கப் பட்டுள்ளது காலத்தின் கோலமே.
 5605168488_a49df5c585_b
1968ல் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 45 ஆண்டுகள் கடந்தும் சட்டமாகாமல் இருப்பது அன்னா ஹசாரேவின் குற்றமா ?  இன்று காங்கிரஸ் சார்பாக பேட்டியளிக்கும் தலைவர்கள் சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அதை ஒரு பூங்காவில் போராட்டம் நடத்துவதன் மூலமாக முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்களே….    1968 முதல் ஒரு 10 ஆண்டுகளைத் தவிர்த்து, தொடர்ந்து ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தானே  ?  என்ன செய்து கொண்டிருந்தார்கள் இத்தனை ஆண்டுகளாக ?

காங்கிரஸ் எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நாம் ஏற்கனவே பல முறை விவாதித்திருக்கிறோம்.   அதன் கோர வடிவத்தைத் தான் இப்போது பார்க்கிறோம்.  இந்திரா காந்தி கொல்லப் பட்ட பிறகு, டெல்லி வீதிகளில் 3000த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு காரணமான தலைவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் அளவுக்கு வக்கிர புத்தியுடையது காங்கிரஸ் கட்சி. அந்த வக்கிர புத்தியின் ஒரு வடிவமே இன்றைய கைது நடவடிக்கை.

ஏன் இந்த லோக் பால் மசோதாவைப் பார்த்து காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது ?  ஏனென்றால், இந்த மசோதா சட்டமானால், பெரும்பாலான  காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்ற அச்சமே…. ஒவ்வொரு தேர்தலை சந்திப்பதற்கும், கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி, அதற்கு கை மாறாக, பதவிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த லோக்பால் மசோதா, பயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மசோதாவை சட்டமாக்காமல், அதற்கு பதிலாக வலுவற்ற ஒரு சட்டத்தை உருவாக்கும் தீய நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி அத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியிருக்கிறது.  மார்ச் மாதத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கிய போது, நாடு முழுவதும் திரண்ட ஆதரவைப் பார்த்து ஆடித்தான் போனது காங்கிரஸ் கட்சி.   அந்த அச்சத்தின் காரணமாகத் தான், அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கலந்து  ஆலோசனை நடத்தி சட்ட வரைவை உருவாக்குவது என்று முடிவெடுக்கப் பட்டது.

அரசு சார்பில், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல் மற்றும், சல்மான் குர்ஷீத் ஆகியோரும், மக்கள் சார்பாக சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே, அன்னா ஹசாரே, மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இருப்பது என்று முடிவெடுக்கப் பட்ட முதலாகவே, மக்கள் சார்பாக இருந்த குழுவை சிதைக்க அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் காங்கிரஸ் கட்சியினர்.  முதலில், தந்தையும் மகனும் ஒரு குழுவில் இருக்கக் கூடாது என்றனர்.  பின்னர் சாந்தி பூஷண் மீது குற்றம் சுமத்தும் வகையில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடலை தயாரித்து, டெல்லி பத்திரிக்கைகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர்.  அந்த உரையாடல் பொய் என்று சாந்தி பூஷண் மறுத்ததும், ஒரு சோதனைக் கூடம், அதை சோதித்து உண்மையான சிடி என்று அறிக்கை வெளியிட வைத்தனர்.  பின்னர் சாந்தி பூஷண் நொய்டா மாகாணத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்று ஒரு குற்றச் சாட்டுகளை சுமத்தினர்.  இந்த தந்திரங்கள் எதுவுமே பலிக்காமல் போனதும், இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிராகரித்து, பேச்சுவார்த்தையை முடிவுக்கு வந்தனர்.  பேச்சு வார்த்தை நடப்பதை அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்று  மக்கள் குழு கோரியதை, நிராகரித்து, அந்த பேச்சுவார்த்தைகளையும் ரகசியமாக நடத்தினர்.

இன்னும் ஒரு படி கீழே போய், அன்னா ஹசாரே ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் மீது ஏதேனும் குற்றச் சாட்டுகள் உள்ளதா என்று விசாரித்தார்கள். அன்னா ஹசாரே ராணுவத்தில் அப்பழுக்கில்லாமல் பணியாற்றினார் என்பது தெரிய வந்ததும் அதை கைவிட்டார்கள்.

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கபில் சிபலும், ப.சிதம்பரமும், ஒரு சிலவற்றைத் தவிர அன்னா ஹசாரே கேட்டுக் கொண்ட அத்தனை ஷரத்துக்களையும் உள்ளடக்கியே லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.  அவர் குறிப்பிட்ட அந்த ஒரு சில தானே முக்கியமானவை ?

மக்கள் மசோதா பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது, அரசு மசோதா கூடாது என்கிறது.  மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுப்பும் புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று அரசு மசோதா கூறுகிறது.  மக்கள் மசோதா, தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறது.  லோக்பால் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்கிறது அரசு மசோதா.  மக்கள் மசோதா, லோக் பால் அமைப்புக்கு வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவும் அதிகாரம் வேண்டும் என்கிறது.   அரசு மசோதா, லோக்பாலுக்கு எப்ஐஆர் போடும் அதிகாரம் கூடாது என்கிறது.  மக்கள் மசோதா, எப்ஐஆர் போடும் அதிகாரம் வேண்டும் என்கிறது. லோக்பால் அமைப்பு தனியாகவும், சிபிஐ தனியாகவும் வேண்டும் என்கிறது அரசு மசோதா.   இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்கிறது மக்கள் மசோதா.  குறைந்த பட்ச தண்டனை 6 மாதங்கள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 வருடங்கள் எனவும் கூறுகிறது அரசு மசோதா.   குறைந்த பட்ச தண்டனை 10 வருடங்கள் எனவும், அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்றும் மக்கள் மசோதா கூறுகிறது.

இவைதான் ப.சிதம்பரம் குறிப்பிட்ட ‘ஒரு சில’.  இந்த ஷரத்துக்கள் மொத்த சட்டத்தையுமே அல்லவா மாற்றி விடுகிறது ?   அதிக பட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்று இப்போது உள்ள லஞ்ச ஒழிப்புச் சட்டமே சொல்கிறதே… பிறகு எதற்கு புதிய சட்டம் ?    சிபிஐ போன்ற அமைப்புகளை தனியாக வைத்திருந்தால் தான், தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டவும், வேண்டியவர்களை குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்றவும் முடியும் என காங்கிரஸ் அரசு நினைப்பதே, சிபிஐ அமைப்பு தனியாக இருக்க வேண்டும் என்பது.
 3528675790_d50293b1dc_z
காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களைப் போல பெரும்பான்மையான மக்கள் ஊழல் பேர்விழிகள் அல்ல என்பதே….   ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்களைப் பார்த்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.    நாட்டை சுரண்டும் இந்த ஊழலை ஒழிக்கும் காலம் வந்து விட்டதாகவே கருதுகிறார்கள்.    அதனால் தான் அன்னா ஹசாரே கைது செய்யப் பட்டவுடன், நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனங்களை தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.     இன்று வீதிக்கு வந்து போராடும், மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.   படித்த இளைஞர்கள்.   வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் இருந்து தன்னிச்சையாக போராட வீதிக்கு வந்து சிறைக்கும் செல்கிற இந்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணரத் தவறியதே, இன்றைய அன்னா ஹசாரேவின் கைது நடவடிக்கை.
 ar
உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த உடனேயே 5000 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் 3 நாளைக்கு மேல் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்தால், யார்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும் ?  ஒரு ஜனநாயக நாட்டில், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக ஒரு போராட்டம் நடத்துவதை விட, வேறு எந்த முறை சிறந்த முறையாக இருக்க முடியும் ?  இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தித் தானே காந்தி சுதந்திரம் பெற்றார் ?  காந்தி தனது ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிரிட்டிஷாரிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பின்பா நடத்தினார் ?  காந்தியின் பெயரை கூறிக் கொள்ளும் இந்த காங்கிரஸ் தலைவர்கள், இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது ஒரு வகையில், காங்கிரஸின் அசல் முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.  இது காங்கிரஸை தனிமைப் படுத்துவதற்கு உதவவே செய்யும்.
இந்தியாவையே மாற்றப் போகிறேன் என்று கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ராகுல் காந்தியின் கனத்த மவுனம், அவர் எப்படி மாற்றப் போகிறார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
கொள்கை மாறுபாடுகளை மறந்து, ஒரு நியாயமான நோக்கத்துக்காக, இடது சாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடிக் கட்சி மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் ஒன்றாக ஒரு அணியில் நின்று காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு ஆளாக்க முயன்றிருப்பது, வரவேற்கத் தக்க விஷயம்.    மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை அமலுக்கு கொண்டு வர முனையும் காங்கிரஸ் கட்சியை, ஒழித்துக் கட்டுவதற்கு, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை கருவறுக்கும் பணி, தமிழர்களாகிய நமக்கு கூடுதலாகவே இருக்கிறது.

perarivalan madal

முதலாவதாக…..

நீதியின் கண்களை திறக்க முற்படும் நம் அன்புத் தம்பி பேரறிவாளனின் நியாயக்குரல்……

என் குரலைக் கேளுங்கள்

பேரறிவாளன்

அனைவருமே எதிர்த்து நின்றாலும்சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”
உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.
அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.
உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.
மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.
ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு பெருங்கதை என் போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு ‘மாமூல்’ தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதி யென அறிவித்து ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
சாதாரண பெட்டிக் கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான பேட்டரி செல் இரண்டு வாங்கித் தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில்    அரண்மனை  கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்து கிடக்கிறேன்.
எனது வழக்கில் மூடிமறைக்கப் பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”  என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு துவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழி யில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிக தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர், எனது குற்றமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர் களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.
எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ் காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல; அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ் காந்தி யின் உயிர்ப் பலிக்கு ஈடாக அக் குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனித நேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.
அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளைத் திருப்புங்கள். என் தரப்பு உண்மைகள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில், எனது விடுதலைக்காக உங்கள் வலிமை யான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக் குமுறலை உலகம் புரிந்து கொண்டது என வரலாறு குறிக் கட்டும்.
நீதி வெல்லட்டும்.
 நன்றி : சண்டே இந்தியன் – மே 18 – 2011

junior vikatan from the other day

கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2.
முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200
சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4.
கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5.
கோபாலபுரத்தில் மு..முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6.
கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7.
மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8.
சி..டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9.
மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10.
ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687
சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு..ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12.
நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13.
சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14.
கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6
கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலிஅலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17.
மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18.
சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19.
கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20.
பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21.
பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22.
மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23.
பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24.
பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு..தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்மதிப்பு - 48 கோடி.

25.
அந்தியூரில் இருக்கும் மு..தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26.
புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27.
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28.
தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29.
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30.
முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31.
ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32.
மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33.
தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34.
திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35.
துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36.
மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37.
மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38.
மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39.
மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41.
மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42.
மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43.
மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45.
மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46.
மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.



47.
மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48.
கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49.
மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50.
சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51.
சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

3
கோடி.

52.
மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53.
சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55.
மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56.
மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க் மதிப்பு - தெரியவில்லை.

57.
மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58.
சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. '
வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60.
கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61.
ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62.
கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63.
அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64.
கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66.
எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67.
தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68.
சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69.
கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.