சட்டம் - ஒழுங்கு காவல் பணிக்கு மாற முடியாமல் தவிக்கும் எஸ்.ஐ.க்கள்
First Published : 20 Aug 2011 04:33:21 AM IST
கரூர்: தகுதியிருந்தும் சட்டம் - ஒழுங்கு (தாலுகா) காவல் பணிக்குச் செல்ல முடியாமல், தமிழகத்தில் 592 காவல் உதவி ஆய்வாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகக் காவல் துறையில் 2004-06 ஆம் ஆண்டு வரையிலான காலி பணியிடங்களைக் கருத்தில் கொண்டு, 2006-ல் 754 ஆண், பெண் உதவி ஆய்வாளர்களுக்கான நேரடித் தேர்வு நடைபெற்றது. இதில், 20 சதவீதம் துறை ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு 2008-ல் பணி நியமன ஆணை வழங்கியபோது, மதிப்பெண்கள் அடிப்படையில் சட்டம் - ஒழுங்கு பணிக்கு 162 பேர், ஆயுதப் படைக்கு 400 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 192 பேர் என 3 பிரிவு நிலைகளாக ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு காவல் உயர் பயிற்சியகத்தில் ஒரே விதமான பாடத் திட்டத்தைக் கொண்டு, சட்டம் மற்றும் திறந்தவெளி பயிற்சியளிக்கப்பட்டது.
தாலுகா உதவி ஆய்வாளர்கள், காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு, குற்றம், தனிப் பிரிவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
இதர பணி நிலைகளில் உள்ளோர் குறிப்பிட்ட பகுதிகளுக்கான காவல், முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு, கலவர நேரங்களிலான பணி, போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆனாலும், இவர்களின் நோக்கம் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி, தங்களின் திறமையை நிலைநாட்டுவதே. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காதோ என்ற அச்சத்தில் 592 உதவி ஆய்வாளர்களும் உள்ளனர்.
இதற்குக் காரணம் 5.11.1997-ம் தேதியிட்ட அரசாணை எண். 1598-ல் கூறப்படும் விதிகளாகும். அதில், ஆயுதப் படை, சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள், தாலுகா உதவி ஆய்வாளராக மாறுதலில் செல்ல, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தற்போதைய பணியிடத்திலேயே பணி செய்திருக்க வேண்டும். 40 வயதுக்குள்ளிருக்க வேண்டும். எவ்விதத் தண்டனையுமின்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 20 சதவீதத் துறை ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்படும் உதவி ஆய்வாளர்களுக்கு வயது உச்ச வரம்பு, பணியில் சேரும்போது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அரசாணையில் கூறப்படும் விதிகள், துறை ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற 40 வயதைக் கடந்தோர், காவல் துறையில் 10 முதல் 20 ஆண்டுகள் வரையில் பணியாற்றிய அனுபவம் உள்ளோர் தாலுகா பணிக்குச் செல்லும் வாய்ப்பைத் தடுக்கும் விதத்தில் உள்ளன.
இந்நிலையில், இந்த அரசாணையானது 2003-ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது தளர்த்தப்பட்டு, காவல் துறையில் பணியாற்றுவோருக்கு பணி அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, 40 வயது என்ற வரம்பு, உதவி ஆய்வாளராக 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற விதிகளைத் தளர்த்தி, 4.4.2003 ஆம் தேதியிட்ட அரசாணை எண். 312 வெளியிடப்பட்டது. இதன்படி, நேரடி உதவி ஆய்வாளர்கள் தாலுகா பிரிவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.
மேலும், நடைமுறையிலுள்ள அரசாணைப்படி, உதவி ஆய்வாளரைத் தேர்ந்தெடுக்கும்போது, தாலுகா உதவி ஆய்வாளர் காலியிடங்களில் 10 சதவீத இடங்களை ஆயுதப் படை மற்றும் சிறப்புக் காவல் படை உதவி ஆய்வாளர்களுக்கு அளிக்கவும் வகை செய்யப்பட்டது.
ஆனால், 2010-ல் நடந்த உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இந்த 10 சதவீத நடைமுறையானது பின்பற்றப்படவில்லை.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் 2,933 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. மேலும், தலைமைக் காவலர்களாக இருந்தவர்கள் பணி மூப்பு அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், தகுதியிருந்தும் திறமையை வெளிக்காட்ட முடியாத துறைகளில் 592 உதவி ஆய்வாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையை மாற்ற, நேரடி உதவி ஆய்வாளராகப் பயிற்சி முடித்து, ஆயுதப் படை, சிறப்புக் காவல் படையில் பணியாற்றும் 592 உதவி ஆய்வாளர்களை வயது மற்றும் 5 ஆண்டு உதவி ஆய்வாளர் பணி அனுபவம் ஆகிய விதிகளைத் தளர்த்தி, தாலுகா பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்தப் பணியிட மாற்றத்தால் அரசுக்கு நிதிச் சுமை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் எனக் கோருவதோடு, பணி அனுபவத்தால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் தங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்கின்றனர் இவர்கள்.

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்